அபுதாபி பிக் டிக்கெட் நடத்திய வாராந்திர மின்னணு டிராவில் பெஞ்சமின் ஜான் என்ற இந்தியர் 250,000 திர்ஹம் வென்றுள்ளார்.
அபுதாபியில் வசிக்கும் இவர், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தனது அதிர்ஷ்டத்தை முயற்சி செய்ததாகவும், இறுதியாக வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளார்.
“கடந்த 40 மாதங்களாக டிக்கெட்டுகளை வாங்கிய நிலையில், இன்று நான் பெரிய வெற்றியைப் பெற்றேன்” ஜான் நெகிழ்ந்துள்ளார்.
204094 என்ற வெற்றிச் சீட்டை தனது நண்பர்களுடன் சேர்ந்து வாங்கிய கூறியுள்ள ஜான், பரிசுத்தொகையை எப்படிச் செலவிடுவது என தெரியவில்லை என கூறியுள்ளார்.
பிரபலமான அமீரக டிராவின் ஒவ்வொரு டிக்கெட்டின் விலை 500 திர்ஹம்ஸ். இரண்டு டிக்கெட்டுகளை வாங்கினால், பங்கேற்பாளர்கள் மூன்றாவது டிக்கெட்டை இலவசமாகப் பெறுவார்கள்.
ஜான் தற்போது வென்றுள்ள 250,000 திர்ஹம் பரிசுத்தொகையுடன் சேர்த்து, பிப்ரவரி 3ந் தேதி நடைபெறும் டிராவில் மெகா பரிசு 22 மில்லியன் திர்ஹம், இரண்டாம் பரிசு 1 மில்லியன் மற்றும் மூன்று பெரிய பரிசுகளை வெல்லும் வாய்ப்பு உள்ளது.