UAE Tamil Web

காலாவதியாவதற்கு 1 வருடத்திற்கு முன்னரே பாஸ்போர்ட்டை புதுப்பியுங்கள் – இந்தியர்களை வலியுறுத்தும் துணைத் தூதரகம்..!

passport

அமீரகத்தில் வசித்துவரும் இந்தியர்கள் தங்களது பாஸ்போர்ட் காலாவதியாகும் கடைசித் தேதிவரை காத்திருக்காமல் காலாவதியாவதற்கு 1 வருடத்திற்கு முன்னரே புதுபிபித்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் பாஸ்போர்ட், கல்வி மற்றும் சான்றளிப்புப் பிரிவு அதிகாரி ராம் குமார் தங்கராஜ்,” இந்தியர்கள தங்களது பாஸ்போர்ட் காலாவதியாவதற்கு 1 வருடத்திற்கு முன்னரே அதனை புதுப்பித்துக்கொள்ளலாம். இதன்மூலம் கடைசிநேர பதற்றத்தைக் குறைக்கலாம். ஆகவே நாங்கள் இந்த முன்கூட்டிய புதுப்பித்தலை பரிந்துரைக்கிறோம்” என்றார்.

பாஸ்போர்ட் புதுப்பித்தலில் போலீஸ் சரிபார்ப்பு விதிமுறைகளை கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துணைத் தூதரகம் திருத்தியமைத்தது. அதனடிப்படையில் மக்கள் தங்களது முகவரி உள்ளிட்ட தகவல்களில் மாற்றம் செய்திருந்தால் மட்டுமே போலீஸ் சரிபார்ப்பு அவசியம் எனவும் தகவல்களில் மாற்றம் இல்லாதவர்கள் போலீஸ் சரிபார்ப்பை மேற்கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், போலீஸ் சரிபார்ப்பு பணிகள் இல்லாத பட்சத்தில் இரண்டு வேலைநாட்களில் பாஸ்போர்ட் புதுப்பித்தல் பணிகள் முடிவடையும் எனவும் ராம்குமார் தெரிவித்தார். மேலும், போலீஸ் சரிபார்ப்பு தேவைப்படும் பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் அட்டேஸ்டேஷன் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவசர சூழ்நிலை காரணமாக சில பயணிகளுக்கு பாஸ்போர்ட் புதுப்பிக்கப்பட்ட பிறகு போலீஸ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும் வசதியும் வழங்கப்படுகிறது. மக்கள் தட்கல் மூலமாக பணம் செலுத்தி விரைவாக தங்களது பாஸ்போர்ட்டைப் பெறலாம் எனவும் ராம்குமார் தெரிவித்தார்.

“இதுபோன்ற சூழ்நிலையில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டவுடன் போலீஸ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. விண்ணப்பதாரர் மீது குற்றவியல் வழக்கு இருந்தால் அவருக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் வழங்கப்படும். வழக்கு குறித்து விண்ணப்பதாரர் சரியான விளக்கத்தை தராத பட்சத்தில் மட்டுமே அவரது பாஸ்போர்ட்டை கைப்பற்ற எங்களுக்கு உரிமையுண்டு” என அவர் தெரிவித்தார்.

passport
9 Shares
Share via
Copy link