UAE Tamil Web

அபுதாபி: இந்திய பாஸ்போர்ட் மற்றும் விசா சேவை மையம் புதிய இடத்திற்கு மாற்றம் – தூதரகம் அறிவிப்பு..!

-BLS-INTERNATIONAL-

அபுதாபி: இந்திய பாஸ்போர்ட் மற்றும் விசா சேவைகளை தூதரகத்தின் சார்பில் வழங்கிவரும் BLS International நிறுவனம் அபுதாபியில் புதிய முகவரிக்கு மாறியுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய தூதரக அதிகாரி,” இந்திய சமூக மக்கள் ஷம்ஸ் போட்டிக் மாலில் (Shams Boutik Mall) அமைந்துள்ள BLS மையத்திற்குச் சென்று தங்களுக்கான சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்” என்றார்.

அல் ரீம் ஐஸ்லாண்டில் அமைந்துள்ள இந்த ஷம்ஸ் போட்டிக் மாலில் இருக்கும் இந்த மையமானது காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை திறந்திருக்கும். நாளின் கடைசி டோக்கன் மாலை 4.30 மணிக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல் முஹைரி கட்டிடத்தில் அமைந்துள்ள BLS மையத்தில் பிரீமியம் லவுஞ் சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இவ்வருடத் துவக்கத்தில் டான்யூப் ஹோம்ஸ் மற்றும் அபுதாபி லேபர் கோர்ட்டிற்கு பின்புறம் அமைந்துள்ள முஸாஃபா இண்டஸ்ட்ரியல் பகுதியில் துவங்கப்பட்ட மையமும் தொடர்ந்து இயங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

BLS மையத்தின் புதிய முகவரி,

ஷாம்ஸ் போட்டிக் மால் (Shams Boutik Mall),

லெவல் 1 (Level 1), ஷாப் நம்பர் 32 (Shop No 32),

அல் ராய்ஃபா தெரு (Al Rayfah Street),

அல் ரீம் ஐஸ்லேண்ட் (Al Reem Island).