UAE Tamil Web

அப்பா, அம்மாவைப் பார்க்க அமீரகம் வந்த இந்திய மாணவர் விபத்தில் பலி – சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம்..!

ajmal

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இபாத் அஜ்மல். இவர் தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் அபுதாபியில் வசித்துவந்தார். இந்நிலையில் கடந்த செவ்வாய் இரவு யாஸ் ஐஸ்லேண்ட் பகுதியில் அஜ்மல் ஓட்டிச்சென்ற கார் மரத்தின்மீது மோதி விபத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

இதனால் படுகாயமடைந்த அஜ்மல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்துப் பேசிய அஜ்மலின் உறவினர் ஒருவர்,” அஜ்மல் தனியாக காரினை ஓட்டிச் சென்றிருக்கிறான். அப்போது அவனுக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கவேண்டும். மருத்துவமைக்கு கொண்டுசெல்லப்படும் வழியிலேயே அவன் உயிர் பிரிந்தது” என்றார்.

புதன்கிழமை மாலை அஜ்மலின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி இந்தியன் ஸ்கூலில் 10 ஆம் வகுப்பு வரை பயின்ற அஜ்மல், ப்ரைட் ரைடர்ஸ் பள்ளியில் 12 ஆம் வகுப்பினை முடித்திருக்கிறார். ஐக்கிய ராஜ்யத்தில் உள்ள சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் கார்டிஃப் வளாகத்தில் விமான பொறியியல் மற்றும் பராமரிப்பு பிரிவைப் பயின்று வந்த அஜ்மல் தனது பெற்றோருடன் நேரம் செலவிட ஆசைப்பட்டு சமீபத்தில் அபுதாபி வந்தது குறிப்பிடத்தக்கது.

ajmal
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap