அதிர்ஷ்ட தேவதை நம் வீட்டு காலிங் பெல்லை அழுத்திக்கொண்டிருக்கும் வேளையில் நாம் வேறெதோ வேலையில் பிசியாக இருந்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் நடத்திருக்கிறது கடந்த அபுதாபி பிக் டிக்கெட் டிராவில்.
இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த நஹீல் நிசாமுதீன் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி 278109 என்ற எண் கொண்ட டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற பிக் டிக்கெட்டின் 232 வது டிராவில் நஹீல் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
விஷயம் அதுவல்ல. வெற்றிபெற்ற விஷயம் குறித்து தெரிவிப்பதற்காக பிக் டிக்கெட் நிர்வாகம் அவருக்கு போன் செய்திருக்கிறது. ஆனால், அவர் அளித்திருந்த 2 எண்களுமே நாட் ரீச்சபிள் என வருவதாக நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
அவர் அளித்திருந்த முகவரியில் அவர் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் விரைவில் அவருக்கு தகவல் தெரிவிக்கப்படும் எனவும் பிக் டிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேபோல சவுதியில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த ஏஞ்சலோ ஃபெர்னாண்டஸ் கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி 000176 என்ற எண் கொண்ட டிக்கெட்டை வாங்கியிருந்திருக்கிறார். இதில் அவருக்கு 1 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசு கிடைத்திருக்கிறது.
