UAE Tamil Web

மக்களே கவனம்..கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறினால் 20,000 திர்ஹம்ஸ் அபராதம்!

கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்திருக்க அமீரக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மீறி கொரோனா பரவும் விதமாக நடந்து கொண்டால் 20,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அமீரகம் வருவோர் முறையான தகவல்களை அரசிடம் அளித்து தனிமையில் இருக்க வேண்டும். தனிமைப்படுத்துதல் காலத்தில் வெளியில் சுற்றித்திரிவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்மந்தப்பட்டவருக்கு 20,000 திர்ஹம்ஸ் அபராதம் வசூலிக்கப்படும்.

700 Beachgoers In Dubai Fined AED3000 For Flouting Covid-19 Rules

இதேபோல பணியிடங்களில் ஊழியர்கள் யாருக்கேனும் கொரோனா உறுதியானால் உடனடியாக அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதனை மறைக்க முற்பட்டால் சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு 20,000 திர்ஹம்ஸ் அபராதத்துடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா, கடுப்பூசி குறித்து வதந்திகளை பரப்புதல், குடியிருப்புகளை அதிக மக்களை வைக்க அனுமதித்தல், நோய் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாமல் இருத்தல் உள்ளிட்டவை குற்றமாக கருதப்படும். தவறிழைப்போர் கட்டாயம் 20,000 திர்ஹம்ஸ் அபராதம் கட்டியே ஆக வேண்டும் என அரசு தரப்பில் கடுமையான எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2 Shares
Share via
Copy link