UAE Tamil Web

அமீரகத்தில் பாலிமர் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட புதிய 5 மற்றும் 10 திர்ஹம்ஸ் நோட்டுகள் அறிமுகம்!

அமீரகத்தில் இரண்டு புதிய 5 மற்றும் 10 திர்ஹம்ஸ் நோட்டுகளை மத்திய வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிதாக வெளியிடப்படவுள்ள 5 மற்றும் 10 திர்ஹம்ஸ் நோட்டுகள் சுற்றச்சூழலுக்கு ஏற்ற பாலிமர் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

மறைந்த அமீரகத் தந்தையான ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யானின் படம் 5 மற்றும் 10 திர்ஹம்ஸ் நோட்டுகளில் இடம்பெற்றுள்ளது.

இப்புதிய 5 திர்ஹம் நோட்டு சிகப்பு வண்ணத்திலும், 10 திர்ஹம்ஸ் நோட்டு பச்சை நிறத்திலும் உள்ளது.

5 திர்ஹம்ஸ் நோட்டின் முன்பகுதியில் அஜ்மான் கோட்டையின் படமும், பின்பகுதியில் ராசல் கைமாவின் கோட்டையின் படமும் உள்ளது.

திர்ஹம்ஸ் நோட்டின் அபுதாபியில் உள்ள ஷேக் ஜயித் கிராண்ட் மசூதியின் படமும், பின்பகுதியில் ஷார்ஜாவின் கொர்ஃபக்கன் படமும் உள்ளது.

10 திர்ஹம்ஸ் நோட்டு இரண்டு நாட்களுக்கு முன்னர் புழக்கத்திற்கு வந்துவிட்டதாகவும், 5 திர்ஹம்ஸ் ஏப்ரல் 26 முதல் புழக்கத்திற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap