UAE Tamil Web

அமீரகம் என்பது நாடல்ல ; அது ஓர் உலகம் : ட்விட்டரில் மாஸ் காட்டிய துபாய் ஆட்சியாளர்..!

His-Highness-Sheikh-Mohammed-Bin-Rashid-Al-Maktoum--Vice-President-and-Prime-Minister-of-the-UAE-and-Ruler-of-Dubai_

குளோபல் சாஃப் பவர் இன்டெக்ஸ் (Global Soft Power Index), உலகில் மென் ஆற்றல் துறையில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பிராந்திய அளவில் முதலிடத்தையும் உலகளவில் 17 வது இடத்தையும் அமீரகம் பிடித்துள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கும் அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், இந்தத் துறையில் கடந்த வருடம் அமீரகம் பிடித்திருந்த இடத்திலிருந்து தற்போது முன்னேறியிருப்பதாகவும் அதனால் பெருமிதம் கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

கொரோனா சூழ்நிலையை கச்சிதமாக கையாளும் நாடுகளின் பட்டியலில் அமீரகம் முதல் 15 இடங்களுக்குள் இருப்பதையும் துபாய் ஆட்சியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

105 நாடுகளைச் சேர்ந்த 77,000 பேரிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த குளோபல் சாஃப்ட் பவர் சம்மிட் (Global Soft Power Summit 2021) வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டு விவகாரங்களை கண்காணிப்பதில் உலகளாவிய ஊடகங்கள் ஆர்வம் காட்டும் நாடுகளின் பட்டியலில் அமீரகம் 9 வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் அமீரகம் 8 இடங்கள் முன்னேறியிருப்பதாக துபாய் ஆட்சியாளர் தெரிவித்திருக்கிறார்.

உலகளாவிய நிலையான பொருளாதாரம் மற்றும் சர்வதேச அமைதிக்கு காரணமாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் அமீரகம் முதல் 10 இடங்களுக்குள் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து ஷேக் முகமது,” இந்த தரவுகளின் அடிப்படையில் நாங்கள் உலகத்திற்கு சொல்ல விரும்புவது ஒன்றைத்தான். அமீரகம் பல்வேறு மக்களுக்கிடையில் பாலமாக இருக்கும். அனைவரையும் நேர்மறையான எண்ணங்களால் கட்டியணைக்கும். அனைத்து கலாச்சாரங்களும் சங்கமிக்கும் இடமாக அமீரகம் அமையும். ஏனெனில் அமீரகம் இந்த உலகத்தின் ஒரு நாடல்ல. அமீரகம் என்பது ஓர் உலகம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

His-Highness-Sheikh-Mohammed-Bin-Rashid-Al-Maktoum--Vice-President-and-Prime-Minister-of-the-UAE-and-Ruler-of-Dubai_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap