UAE Tamil Web

டிசம்பர் 5: இந்த நாளில் ‘இவர்களை’ நினைத்து அமீரகம் மிகவும் பெருமைப்படுகிறது.! ஷேக் ஹம்தான் பின் சயீத் வெளியிட்ட அறிக்கை..

volunteers

ஜனாதிபதியான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் தலைமையிலான அமீரகம், தன்னார்வப் பணிகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை அளித்துள்ளது. தொண்டு, கொடுப்பது மற்றும் தாராள மனப்பான்மைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட முயற்சிகளை ஊக்குவிக்கிறது என ஆட்சியாளரின் அல் தஃப்ரா பகுதிக்கான பிரதிநிதியும், அமீரக ரெட் கிரெசென்ட் அமைப்பின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் சயீத் அல் நஹ்யான் கூறியுள்ளார்.

- Advertisment -

டிசம்பர் 5 சனிக்கிழமையான இன்று சர்வதேச தன்னார்வலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சர்வதேச தன்னார்வ தினம் ஐ.நா சபையால் 1985-ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ஷேக் ஹம்தான். அதில் ஆதரவு மற்றும் வழிமுறைகளை தொடர்ந்து அளித்து வரும் அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் அபுதாபியின் பட்டத்து இளவரசர் பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொண்டுள்ளார்.

கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தன்னார்வலர்கள் வழங்கி வரும் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் ஷேக் ஹம்தான் எடுத்துரைத்தார். தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த மற்றும் இன்னும் முன்கள பணியில் இருக்கும் தன்னார்வலர்களை நினைத்து அமீரகம் மற்றும் அதன் தலைமை மிகவும் பெருமை கொள்கின்றன. தன்னார்வலர்களின் பங்களிப்பானது நாட்டின் தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை திட்டங்கள் மற்றும் உத்திகளை உறுதியான நடவடிக்கையாக மாற்றியுள்ளது.

தன்னார்வலர்கள் எடுத்த முயற்சிகளுக்கு நன்றி, ஏனென்றால் அதனால் தான் இந்த தொற்றுநோயை வெற்றிகரமாக சமாளிக்க முடிந்தது.மேலும் உலகம் முழுவதும் உள்ள தன்னார்வலர்கள் எதிர்கொள்ளும் சவால்களை கோடிட்டுக் காட்டியுள்ளார் ஷேக் ஹம்தான். குறிப்பாக ஆயுத மோதல்கள் உள்ள பகுதிகளில், ஆண்டுதோறும் ஏராளமான மனிதாபிமான தன்னார்வலர்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் புனிதமான கடமைகளை செய்யும் போது கொல்லப்படுகிறார்கள் என்பதை குறிப்பிட்டார்.