UAE Tamil Web

மக்கள் கவலைகொள்ள வேண்டாம்.. குரங்கம்மையை சமாளிக்க தயாராக உள்ளோம் – நம்பிக்கை தரும் அமீரக மருத்துவர்கள்!

அமீரகம் இந்த பெருந்தொற்றை திறம்படக் கையாண்டு வருவதே குரங்கம்மை நோயையும் சமாளிப்பதற்கான நமது திறனை காட்டுகிறது என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அமீரகம் வந்து 29 வயது பெண்ணுக்கு குரங்கம்மை இருப்பது கடந்த மே 24ம் தேதி அன்று உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் அமீரகத்தின் சுகாதார மற்றும் நோய் தடுப்பு அமைச்சகம் (MoHAP) எந்தவொரு சவால்களையும் சமாளிக்க நாடு முழுமையான தயார் நிலையில் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

அமீரகத்தில் ஒரு குரங்கம்மை நோய் பதிவாகியிருந்தாலும், சந்தேகத்திற்கிடமான வழக்குகளை கட்டுப்படுத்தும் அமைப்புகள் தங்கள் கண்காணிப்பை மேம்படுத்தியுள்ளதால், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று சுகாதார நிபுணர்கள் உறுதியளித்துள்ளனர்.

டாக்டர் ஜோதி உபாத்யாய் இதுகுறித்து பேசும்போது “மேற்கு திசையில் உள்ள நாடுகளில் வழக்குகள் அதிகரித்து வருவது உண்மைதான், ஆனால் நமது அமீரகத்தில் எல்லாமே கட்டுப்பாட்டில் உள்ளது” ஆகவே மக்கள் அச்சம்கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இந்த தொற்றுநோயைக் கையாள்வதில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சுகாதாரத் தரத்தை உயர்த்தியுள்ளன என்று பிரைம் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும் நுரையீரல் நிபுணருமான டாக்டர் முகமது ரபீக் கூறினார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap