UAE Tamil Web

“கனவுகளை நனவாக்க உலகின் பாதுகாப்பான இடம் அமீரகம்”.. EXPO-வில் உலகப் புகழ்பெற்ற ஸ்டீவ் ஹார்வி பேச்சு!

உங்கள் கனவுகளை நனவாக்க உலகின் பாதுகாப்பான இடம் அமீரகம் என்று உலகப் புகழ்பெற்ற அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளரும் நகைச்சுவை நடிகருமான ஸ்டீவ் ஹார்வி தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக் கிழமையான நேற்று EXPO 2020 ஸ்டீவ் ஹார்வி ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

“உங்கள் கனவுகளை நனவாக்க பாதுகாப்பான இடங்களில் அமீரகமும் ஒன்றாகும். இங்கு எந்த கவலையும் இல்லை. கனவுகளை சாத்தியமாக்கும் நாடாக அமீரகம் திகழ்கிறது. இந்த துபாய், அபுதாபி உள்ளிட்ட மற்ற எமிரேட்டுகள் அனைத்தும் அமீரகத்தின் சிறந்த தலைமையால் கற்பனை செய்யப்பட்டவை. அதனால் தான் கற்பனை செய்தப்படியே உள்ளது. நீங்கள் பார்க்கும் அனைத்தும் யாரோ ஒருவரின் கற்பனையில் இருந்து வந்தவையே” என்றார் ஹார்வி.

EXPO 2020 துபாய் பார்வையாளர்களுடன் தனது குழந்தைப் பருவ வாழ்க்கை குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட ஸ்டீவ் ஹார்வி, “தான் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்ததாகவும், ஆனால் என்னை நானே ஒரு பணக்காரனாக கற்பனை செய்து கொண்டேன். நான் ஏழையாக இருந்தபோது, ​​​​நான் ஒரு பணக்காரனாக கனவு கண்டேன், உங்கள் கற்பனைக்கான அர்த்தம், கடவுள் உங்களுக்கு தரவிருக்கும் முன்னோட்டத்தை கனவில் மூலம் காட்டுகிறார்” என்று அவர் கூறினார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap