UAE Tamil Web

வந்தாரை வாழ வைக்கும் அமீரகம் – இந்திய நாடாளுமன்றத்தில் வெளியான உண்மை!

1970 முதல் இந்தியாவில் இருந்து பல தரப்பட்ட மக்களும் கடல் தாண்டி வந்து அமீரகத்தில் வேலை செய்யத் தொடங்கிவிட்டனர். பொருளாதார சூழல், வேலையில்லா திண்டாட்டம் எதிரொலியால் தற்போதும் அதே நிலை நீடிக்கிறது. இந்தியாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அமீரகம், சவுதி உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.x“

Indian airports stretched as passengers reach new heights

வெளிநாடுகளில் இந்தியர்கள் பணிபுரிவது குறித்த அறிக்கையை இந்திய நாடாளுமன்றத்தில் அந்நாட்டு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் வெளியிட்டார். அதில் அதிகளவில் இந்தியர்கள் பணிபுரியும் வெளிநாடுகளின் பட்டியலில் அமீரகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. 2வது இடத்தில் சவுதி அரேபியாவும் 3வது இடத்தில் கத்தார் நாடும் உள்ளன. அமெரிக்கா, ஓமன் ஆகிய நாடுகள் 4,5 இடங்களை பிடித்துள்ளன.

First session of the Rajya Sabha was held on this day: Facts on the Upper House of Indian Parliament - Education Today News
இந்திய நாடாளுமன்றம்

இந்திய இளைஞர்களுக்கு உதவும் வகையில் வெளிநாடுகளில் உள்ள அதிகாரப்பூர்வமான வேலைவாய்ப்பு மையங்கள் குறித்த தகவல்களை இணையதளம் மூலம் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதேபோல வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றும் மோசடி கும்பல் குறித்த விவரங்களும் விழிப்புணர்வு கருதி வெளியிடப்பட்டுள்ளதாக கூறினார். இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் வேலையாட்கள் (Unskilled Workers) குடியேறியவர்கள் பாதுகாப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் ஒரு மாநிலத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகமாகச் சென்ற வேலையாட்களின் பட்டியலில் இந்தியாவின் உத்தரப் பிரதேசம் முதலிடம் வகிக்கிறது. அதனைத் தொடர்ந்து பீஹார், மேற்கு வங்கம், தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் உள்ளதாக இந்திய நாடாளுமன்றத்தில் அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

3 Shares
Share via
Copy link