UAE Tamil Web

சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டால் “இந்த விளைவுகளை” சந்தித்தே ஆக வேண்டும்.! அமீரகம் எச்சரிக்கை

online

அமீரகத்தில் சமூக வலைதளங்கள் வாயிலாக அவமதிப்பு மற்றும் அவதூறான கருத்துக்களை வெளியிடும் நபர்கள் தண்டனைக்குரிய குற்றம் செய்தவர்களாக கருதப்படுவர். சமூக ஊடக மீறல்களில் ஈடுபடுவோருக்கு அபராதம் முதல் சிறை தண்டனை வரை விதிக்கப்படும் என்பது நாம் அறிந்ததே.

சமூக வலைத்தளங்களில் என்ன செய்யலாம்.? என்னவெல்லாம் செய்யக்கூடாது.? என்பதை விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

கடந்த கடந்த 2018-ம் ஆண்டை ஒப்பிடும் போது 2019-ல், அதிக அளவிலான சமூக ஊடக மீறல் வழக்குகளை கையாண்டுள்ளதாக அமீரக அதிகாரிகள் கூறியுள்ளனர். 2018-ம் ஆண்டு சமூக ஊடக மீறல் தொடர்பாக 357 வழக்குகள் பதிவான நிலையில், 2019 ஆம் ஆண்டில் 512 வழக்குகளை கையாண்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 2017-ல் 392 வழக்குகள் கையாளப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக மீண்டும் எச்சரித்துள்ள அமீரக வழக்கறிஞர்கள், “ஆன்லைனில் தனிப்பட்ட நபர் அல்லது நிறுவனம் உள்ளிட்டவற்றை அவமதிக்கும் வகையிலோ, அவர்களுக்கு எதிரான அவதூறான கருத்துக்களையோ பதிவிடும் குடியிருப்பாளர்கள், சிறைத்தண்டனை மற்றும் 500,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் பெற நேரிடும். அதே போல அவதூறு கருத்துக்கள் அடங்கிய செய்திகளை சக சமூக ஊடக பயனர்களுக்கு அனுப்புபவர்களுக்கும் இந்த அபராதம் பொருந்தும்” என கூறியுள்ளனர்.

சைபர் கிரைம்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள ஃபெடரல் சட்டம் எண் 5 2020-ன் 20-வது பிரிவு, இணையம் அல்லது எந்தவொரு தகவல் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி ஒரு நபர் குற்றங்களைச் செய்தால் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார் என்று கூறுகிறது.

இது தொடர்பாக ஃபெடரல் பொது அரசு தரப்பு தனது சமீபத்திய பொது விழிப்புணர்வு போஸ்டில், “ஆன்லைனில் பிறரை இழிவுபடுத்தும் வகையிலான கமெட்ண்டுகள் அல்லது போஸ்டுகளை பதிவிடுவோர், அனுப்புவோருக்கு சட்டப்படி சிறைத்தண்டனை மற்றும் / அல்லது 250,000 திர்ஹம்ஸ் முதல் 500,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும்”என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் துன்புறுத்தல், பணம் பறித்தல், பிளாக்மெயில், தவறான தகவல்களை வெளியிடுதல் மற்றும் பரப்புதல், பிறரின் தனியுரிமையில் தலையிடுதல், மோசமான கருத்துகள், போலி விளம்பரங்கள் மற்றும் வதந்திகள் அடங்கிய செய்திகளை பதிவிடுதல், அவதூறு மற்றும் குற்றங்களை செய்ய மற்றவர்களை தூண்டுதல் மற்றும் மோசடி உள்ளிட்டவைகள் முக்கிய சமூக ஊடக மீறல்களாக பட்டியலிடப்பட்டுள்ளது.

குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சமூக வலைத்தளங்களை எளிதாகவும், பரவலாகவும் அணுகக்கூடிய தற்போதை ய காலகட்டத்தில், பயனர்கள் தங்கள் சமூக ஊடக கணக்குகள் வழியாக புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவிடும் போது பொறுப்பான நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



error: Alert: Content is protected !!