UAE Tamil Web

எச்சரிக்கை: அமீரகத்தில் இன்று பரவலாக மூடுபனி ஏற்படலாம் – வானிலை ஆய்வு மையம்..!

fog

அமீரகத்தின் உட்பகுதிகள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் இன்று காலை 1 மணி முதல் 9 மணிவரையில் மூடுபனி ஏற்பட வாய்ப்புள்ளதால் வாகனவோட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்குமாறு அமீரக வானிலை ஆய்வு மையம் நேற்று இரவு அறிவித்திருக்கிறது.

- Advertisment -

மூடுபனி காரணமாக வாகனவோட்டிகளால் சாலையை பார்ப்பதில் சிரமம் ஏற்படலாம் எனவும், சாலையில் எலெக்ட்ரானிக் பலகைகளில் குறிப்படப்பட்டுள்ள வேக அளவுகளை பின்பற்றுமாறு வாகனவோட்டிகளை எச்சரித்திருக்கிறது அபுதாபி காவல்துறை.

செவ்வாய்கிழமையின் பிற்பகுதி பொதுவாக சூரிய ஒளிமிக்கதாகவும் மதியத்திற்கு மேல் கிழக்குத் திசையில் வானம் பகுதி மேகமூட்டமாகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

வெப்பநிலையைப் பொறுத்தவரையில் உட்புறப் பகுதிகள் சிலவற்றில் அதிகபட்சமாக 44 டிகிரி செல்சியஸ் வரையில் பதிவாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமீரகத்தின் சில கடலோர மற்றும் உட்பகுதிகளில் இன்றிரவு மற்றும் நாளை காலை மூடுபனி உருவாகலாம் அதோடு ஈரப்பதம் மிகுந்தும் இருக்கும் எனவும் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

வட – மேற்கு மற்றும் தெற்கு – கிழக்காக குறைவானது முதல் மிதமானது வரையிலும் பகல் வேளைகளில் காற்றானது வீசக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரேபியன் வளைகுடா மற்றும் ஓமான் கடலில் குறைவானது முதல் மிதமான வரையில் சீற்றம் இருக்கும்.