UAE Tamil Web

அமீரக வேலைவாய்ப்பு: செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் தேவை – விபரம் உள்ளே..!

job

அமீரகத்தின் பிரபல மருத்துவமனையான NMC தனது குழுமத்தில் காலியாக உள்ள செவிலியர்கள், பெண் மருத்துவ உதவியாளர்கள் (Midwives) ஆகிய பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

அபுதாபி, அல் அய்ன், ஷார்ஜா, துபாய் ஆகிய இடங்களில் பணிபுரிய, பதிவு செய்யப்பட்ட செவிலியர்கள், பெண் மருத்துவ உதவியாளர்கள் (Midwives) ஆகியோர் தேவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நேர்முகத்தேர்வு வரும் வெள்ளிக்கிழமை அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் நடைபெற இருக்கிறது. விண்ணப்பதாரர்கள் தங்களது CV மற்றும் சான்றிதழ்களை எடுத்துவரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் அல் அய்ன் டவரில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளலாம். துபாய் மற்றும் ஷார்ஜாவைச் சேர்ந்தவர்கள் ஷார்ஜாவில் உள்ள NMC ராயல் மருத்துவமனையில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளலாம் என அந்நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரையில் நேர்முகத்தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.