UAE Tamil Web

மாதக்கணக்கில் வேலையில்லாமல் அமீரகத்தில் தவித்த தமிழருக்கு மஹ்சூஸ் டிராவில் அடித்த ஜாக்பாட் – ஒரே இரவில் கோடீஸ்வரரான அதிசயம்..!

nazeerali

தொழில்துறையில் உச்சம் தொட்ட பலரையும் கொரோனா என்னும் நுண்கிருமி அதலபாதாளத்திற்கு தள்ளியிருக்கிறது. சொந்தமாக கம்பெனி வைத்திருந்தவர்களே கொரோனா அலையில் காணாமல் போயிருக்கும் நிலையில் நடுத்தவர்க்க மக்களைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

அதுவும் நசீர் அலி போன்ற அமீரக வாழ் தமிழர்கள் பலரும் தங்களுடைய வாழ்வின் மிக மோசமான காலகட்டத்தில் வாழ்ந்துவருகிறார்கள். பறிபோன வேலை, ஊரில் தவிக்கும் குடும்பம், மீண்டும் ஊருக்கே சென்றுவிடலாம் என்றால் போய் என்ன செய்வது என்ற கேள்வி? என அவர்களது சோகத்தை ஒற்றைக் கட்டுரையில் இட்டு நிரப்பிவிட முடியாதுதான். ஆனால் நம்பிக்கையும் நேர்மறை சிந்தனையும் இருந்தால் நிச்சயம் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்துவிடலாம் என்னும் வரிகளுக்கு வாழும் உதாரணமாக மாறியிருக்கிறார் நசீர் அலி.

கொரோனா காரணமாக வேலை பறிபோனதும் செலவுகளை சமாளிக்க முடியாமல் துபாயில் இருந்த தனது குடும்பத்தை தமிழகத்திற்கே அனுப்பிவைத்திருக்கிறார் அலி. இப்போது கிடைத்துவிடும், நாளை, அதற்கு அடுத்தநாள் என தனது 53 வயதிலும் வேலைதேடி அமீரகம் முழுவதும் அலைந்து சோர்ந்துபோய் இருந்த சமயம் அந்த மின்னஞ்சல் அவருக்கு வந்திருக்கிறது.

கடந்தவாரம் நடைபெற்ற 36 வது மஹ்சூஸ் டிராவில் இரண்டாவது டயர் வெற்றியாளராக நசீர் அலி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 1 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை அலி மற்றொருவருடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறார். ஆகவே நசீர் அலி 5 லட்சம் திர்ஹம்ஸ் பணத்திற்கு அதிபதியானது அப்போதுதான் அவருக்கு தெரியவந்திருக்கிறது.

மின்னஞ்சலை மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்திருக்கிறார் அலி. அவரால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வாழ்வின் பொற்காலம் எந்த நேரத்தில் துவங்கும் என்பதில் தான் வாழ்க்கையின் சுவாரஸ்யமே இருக்கிறதல்லவா?

உடனடியாக தனது குடும்பத்தை போனில் அழைத்து அவர் சொன்ன முதல் வார்த்தை,” நம்முடைய கஷ்டம் எல்லாம் தீர்ந்தது” என்பதுதான். இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான அலி விரைவில் துபாயில் சொந்தமாக கபே ஒன்றைத் துவங்க இருக்கிறார்.

இதுகுறித்துப் பேசிய அவர்,” மொத்தமுள்ள 6 எண்களில் நான் குறிப்பிட்ட 5 எண்கள் சரியாக பொருந்தியிருக்கிறது. அதுதான் எங்களுடைய கஷ்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. எத்தனை இருளடைந்த பாதையாக இருந்தாலும் அதன் எல்லையில் வெளிச்சம் இருந்துதான் ஆகவேண்டும் என நினைப்பவன் நான். வறுமை, கஷ்டம் என பலவற்றைப் பார்த்திருந்தாலும் என்னளவில் நான் எப்போதும் நேர்மறையாக சிந்தித்தேன். எனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு இது. அதுவும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எங்களது குடும்பம் தவித்துவந்த வேளையில் இறைவன் எனக்கு இதை அளித்திருக்கிறான்” என்றார்.

தன்னைப்போலவே கஷ்டப்படும் மக்களுக்கு இந்தப் பணத்தைக்கொண்டு உதவி செய்ய இருப்பதாகவும் நசீர் அலி குறிப்பிட்டார்.

மஹ்சூஸ் டிராவில் கலந்துகொள்வது குறித்த படிப்படியான வழிமுறைகளைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

nazeerali
193 Shares
Share via
Copy link