UAE Tamil Web

அமீரகத்தில் வேலை தேடுபவரா நீங்கள்..? 7000 திர்ஹம்ஸ் சம்பளம் ; தங்குமிடம் இலவசம் – முழுவிபரம் உள்ளே..!

job

அமீரகத்தில் வேலை தேடுபவரா நீங்கள்? அப்படியானால் நீங்கள் சரியான பதிவைத்தான் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள். இந்தவாரம் இரண்டு இடங்களில் வேலைக்கான நேர்முகத்தேர்வு நடைபெற இருக்கிறது.

முதலாவதாக, வங்கியில் தனிநபர் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்முகத்தேர்விற்கு வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக அதிவேக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (fast-moving consumer goods – FMCG) பிரிவில் வேலையாட்களை எடுக்க இருப்பதாக யூனிகாய் ஃபுட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வங்கிப்பணி

அமீரகத்தில் தனிநபர் கடன் பிரிவில் 1 அல்லது 2 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் இந்தப் பணிக்காக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் திறமையான தகவல்தொடர்பு, வாடிக்கையாளர்களுடனான உறவை மேம்படுத்துவதில் சிறந்தவராக இருத்தல் வேண்டும். மேலும் தேர்ச்சி பெற்றால் உடனடியாக பணிகளில் சேரத் தயாராக இருக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ச்சி பெற்றவர்களுக்கு 7,000 திர்ஹம்ஸ் சம்பளமும் கூடுதலாக கவர்ச்சிகர இன்செண்டிவ்ஸ் -ம் உண்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் கிரெடிட்கார்டு சேல்ஸ் எக்ஸிகியூடிவ் அனுபவம் உள்ளவர்களும் நேர்முகத்தேர்விற்கு வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபர் கடன்கள் மற்றும் கிரெடிட்கார்டு சேல்ஸ் எக்ஸிகியூடிவ் பணிகளுக்கான நேர்முகத்தேர்வு ஜூலை 7 ஆம் தேதிவரையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்காணல் நடைபெறும் முகவரி

மொயாடிவ் எம்ப்ளாய்மெண்ட் சர்வீசஸ் (Moativ Employment Services)

மசூத் டவர் 2 (Masaood Tower 2),

அலுவலக எண் 302-304 (Office No. 302-304), (அல் புட்டைம் டொயாட்டோ ஆட்டோ மாலுக்கு அடுத்தது)

போர்ட் சயீத் (Port Saeed),

தேரா (Deira),

துபாய்.

யூனிகாய் ஃபுட்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

அமீரகத்தைச் சேர்ந்த உணவு நிறுவனமான யுனிகாய் ஃபூட்ஸ் (Unikai Foods) நிறுவனம் தங்களது நிறுவனத்தில் காலியாக உள்ள வேன் சேல்ஸ்மேன், UHT டெக்னீஷியன் போன்ற பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

ஜூலை 8 ஆம் தேதிவரையில் மேற்கண்ட பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேற்கண்ட துறைகளில் 2 – 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் நேர்காணலுக்கு வரலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு கவர்ச்சிகரமான ஊதியமும் தங்குமிடம் மற்றும் போக்குவரத்து ஆகியவை இலவசமாக வழங்கப்படும் எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நேர்காணல் நடைபெறும் முகவரி

யூனிகாய் ஃபூட்ஸ் நிறுவன அலுவலகம்,

அல் கூஸ் -1 (Al Quoz-1),

அல் மெய்தான் தெரு (Al Meydan Street),  துபாய் பவுலிங் மையத்திற்கு அருகே (Dubai Bowling Centre)

துபாய்.

job
0 Shares
Share via
Copy link