UAE Tamil Web

5000 திர்ஹம்ஸ் சம்பளம்; சேல்ஸ் ஆபிசர் பணிக்கு உடனடியாக ஆட்கள் தேவை..!

job

அமீரகத்தின் முன்னணி வங்கிகளில் காலியாக உள்ள விற்பனைப் பிரிவு அதிகாரி பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெற இருக்கிறது. இம்மாதம் மே 19 (புதன்கிழமை) மற்றும் மே 20 ஆகிய தேதிகளில் இதற்கான நேர்முகத்தேர்வு நடைபெற இருக்கிறது. தேர்ச்சி பெறுபவர்களுக்கு 5000 திர்ஹம்ஸ் சம்பளம், இன்செண்டிவ்ஸ் மற்றும் விற்பனை இலக்கை அடைந்தால் அதற்கான ஊக்கத்தொகையும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் இஸ்லாமிய நிதி மற்றும் வழக்கமான வங்கித்துறைகளில் பெர்சனல் லோன் பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்தவராக இருத்தல் அவசியம். திறமையான தகவல்தொடர்பு, வாடிக்கையாளர்களுடனான உறவை மேம்படுத்துவதில் சிறந்தவராக இருத்தல் வேண்டும். மேலும் தேர்ச்சி பெற்றால் உடனடியாக பணிகளில் சேரத் தயாராக இருக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4,000 – 5,000 திர்ஹம்ஸ் சம்பளம் என்றாலும் நன்கு திறமை பெற்றவர்களுக்கு கூடுதலாகவும் வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்நிலைக்கல்வி டிப்ளமோ அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆனால் அரபி மற்றும் இரண்டு மொழி பேசக்கூடியவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

மே 19, 20 ஆகிய தேதிகளில் காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரையிலும் நேர்காணல் நடைபெற இருக்கிறது.

நேர்காணல் நடைபெறும் முகவரி

மசூத் டவர் 2 (Masaood Tower 2),

அலுவலக எண் 302-304 (Office No. 302-304), (அல் புட்டைம் டொயாட்டோ ஆட்டோ மாலுக்கு அடுத்தது)

போர்ட் சயீத் (Port Saeed),

தேரா (Deira),

துபாய்.