UAE Tamil Web

துபாய் RTA வில் டிரைவர் வேலை : 5 நாட்கள் நடைபெறும் நேர்முகத்தேர்வு – மேலும் விபரங்கள் உள்ளே..!

RTA

துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) காலியாக உள்ள டாக்ஸி டிரைவர் பணியிடங்களை நிரப்ப நேர்முகத்தேர்வினை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

முஹைசினா பகுதியில் அம்மான் தெருவில் அமைந்துள்ள துபாய் டாக்ஸி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் 5 நாட்களுக்கு இதற்கான நேர்முகத்தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 11 – 15 ஆம் தேதிவரையில் மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரையில் நேர்முகத்தேர்வு நடைபெற இருக்கிறது.

முழு நேரப் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 2 – 5 வருட அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் தங்களது CV க்களை recruitment@dtc.gov.ae என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். அல்லது +971565151791 என்ற எண்ணிற்கு வாட்சாப் மூலமாக அனுப்பலாம்.

RTA
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap