அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கிவரும் எதிஹாட் ஏர்வேஸ் விமான நிறுவனம் தனது நிறுவனத்தில் காலியாக உள்ள விமானப் பணியாளர்களுக்கான (cabin crew) இடங்களை நிரப்ப இருப்பதாக அறிவித்துள்ளது. 1000 நபர்களைத் தேர்ந்தெடுக்க இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஏற்கனவே கொரோனா காரணமாக பணியிலிருந்து விலக்கப்பட்டவர்களும் தற்போது காலியாக உள்ள இடங்களுக்காக விண்ணப்பிக்கலாம் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கான வேலைவாய்ப்பு நேர்காணல்கள் அமீரகம், எகிப்து, லெபனான், ரஷியா, ஸ்பெய்ன், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அனைவரும் அமீரகத்தில் பணிபுரிவார்கள் என்றும் அவர்களுக்கு அபுதாபியில் வேலைக்கான பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புக்கான நேர்காணலில் கலந்துகொள்வதற்கு முன்னர் கண்டிப்பாக etihad.com/cabincrewrecruitment என்ற இணையப்பக்கத்தில் சென்று முன்பதிவு செய்யவேண்டும் என விண்ணப்பதாரர்களை அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
எதிஹாடில் ஒருவேளை நீங்கள் கேபின் க்ரூ பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் பின்வரும் வசதிகள் உங்களுக்குக் கிடைக்கும்.
- வரியில்லா ஊதியம்.
- மெடிக்கல் இன்சூரன்ஸ்
- பயண சலுகைகள்
- போக்குவரத்து
- சீருடை
- அபுதாபியில் அனைத்து வசதிகளுடன் கூடிய தங்குமிடம்
- அபுதாபியில் உணவு, பானம் மற்றும் ஓய்வு விடுதிகளில் தங்க சலுகைகள்
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடமும் தேதியும்
- அபுதாபி: அக்டோபர் 11
- கெய்ரோ: அக்டோபர் 11
- பெய்ரூட்: அக்டோபர் 17-18
- காசாபிளாங்கா: அக்டோபர் 26
- கியேவ்: நவம்பர் 2
- பார்சிலோனா: நவம்பர் 2
- ஏதென்ஸ்: நவம்பர் 8
- மிலன்: நவம்பர் 9
- ஆம்ஸ்டர்டாம்: நவம்பர் 15
- அலெக்ஸாண்ட்ரியா: நவம்பர் 22
- பெய்ரூட்: நவம்பர் 22
