UAE Tamil Web

அமீரகத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை: 4000 – 7000 திர்ஹம்ஸ் வரையில் சம்பளம் – கூடுதல் தகவல்கள் உள்ளே..!

1140-job-seach-online-tools-reseach-employment

அமீரகத்தில் கொரோனாவிற்குப் பிறகு எதிர்பார்த்தது போலவே பல்வேறு நிறுவனங்கள் தங்களது பணியிடத்தில் உள்ள காலியிடங்களுக்கு ஆட்களை சேர்த்து வருகின்றன. அப்படி சமீபத்தில் ஆட்கள் தேவைப்படுவதாக அமீரகத்தின் முன்னணி நிறுவனங்கள் வெளியிட்டிருக்கும் வேலைவாய்ப்பு தகவல்களை கீழே தொகுத்தளித்துள்ளோம்.

பர்ச்சேஸ் ஆபிசர் (Purchase officer)

துபாயில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனத்தில் காலியாக உள்ள பர்ச்சேஸ் ஆபிசர் பணிக்கு ஆட்கள் தேவைப்படுகின்றன.

அனுபவம்: 2 – 5 ஆண்டுகள்.

அமீரகத்தில் கட்டுமானத் துறையில் பணிபுரிந்த அனுபவம் இருத்தல் அவசியம்.

உங்களது CV ஐ அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

சிவில் என்ஜினீயர்

அபுதாபியில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு அக்ரிகல்சர் அல்லது லேண்ட்ஸ்கேபிங் பிரிவில் தேர்ச்சி பெற்ற சிவில் சைட் என்ஜினீயர் (Civil site engineer agriculture/landscaping) அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அமீரகத்தில் அல்லது GCC நாடுகளில் 1 – 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் அவசியம்.

அபுதாபி நகராட்சியுடன் ஏற்கனவே இணைந்து பணியாற்றியிருந்தால் கூடுதல் முன்னுரிமை.

அமீரக டிரைவிங் லைசன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் அக்ரிகல்சர் அல்லது லேண்ட்ஸ்கேபிங் பிரிவில் அல்லது அதற்கு இணையான பிரிவில் பொறியியல் இளங்கலை முடித்திருக்க வேண்டும்.

உங்களது CV ஐ அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

பையோ மெடிக்கல் சேல்ஸ் என்ஜினீயர்

அபுதாபியில் உள்ள ஹெல்த்கேர் நிறுவனத்தில் ICU மற்றும் ரேடியாலஜி பிரிவில் பயன்படுத்தப்படும் சாதனங்களை விற்பனை/மார்கெடிங் செய்ய பையோ மெடிக்கல் சேல்ஸ் என்ஜினீயர் / ப்ராடக்ட் மேனேஜர் ( Biomedical sales engineer/product manager) தேவைப்படுகிறது.

இந்தத் துறையில் 5 – 7 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் இருத்தல் வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு 5000 – 7000 வரையில் ஊதியம், விசா, கமிஷன், அலோவசன்ஸ் உண்டு.

டார்கெட்டை முடிக்கக்கூடிய ஆளாக இருத்தல் வேண்டும். அமீரகத்தில் சுகாதார நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் இருத்தல் அவசியம்.

அமீரக டிரைவிங் லைசன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் முன்னுரிமை.

உங்களது CV ஐ அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

பையோ மெடிக்கல் என்ஜினீயர்

துபாயில் உள்ள பிரபல ஹெல்த்கேர் நிறுவனத்திற்கு ICU மற்றும் ரேடியாலஜி துறையில் பயன்படுத்தப்படும் சாதனங்களை நிறுவுதல், பராமரித்தல், இயக்குதல் ஆகியவற்றில் அனுபவம் உள்ள பையோ மெடிக்கல் என்ஜினீயர் தேவை.

இந்தத் துறையில் 2 – 5 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் இருத்தல் வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு 5000 – 7000 வரையில் ஊதியம், விசா, கமிஷன், அலோவசன்ஸ் உண்டு.

அமீரக டிரைவிங் லைசன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் முன்னுரிமை.

உங்களது CV ஐ அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

அலுவலக செயலாளர் (Office secretary)

துபாயில் உள்ள பிரபல ஆட்டோமொபைல் நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக செயலளார் பணிக்கு ஆட்கள் தேவை.

இந்தத் துறையில் 5 – 7 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருத்தல் வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு 5001 – 7000 திர்ஹம்ஸ் ஊதியமாக வழங்கப்படும்.

ஆவணங்களை கையாள்தல், தரவுகளை பராமரித்தல், மக்கள் தொடர்பு ஆகிய பணிகளை மேற்கொள்ளவேண்டும்.

அலுவலக சப்ளையை கவனித்துக்கொள்ள வேண்டும்.

உங்களது CV ஐ அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

வாட்சாப் மூலமாக CV அனுப்ப: +971504367610

 

1140-job-seach-online-tools-reseach-employment
87 Shares
Share via
Copy link