UAE Tamil Web

அமீரகத்தில் வேலைவாய்ப்பு: 3 நாட்கள் நடைபெறும் நேர்காணல்; 5000 திர்ஹம்ஸ் வரையில் சம்பளம் – விபரம் உள்ளே..!

job

அமீரகத்தின் முன்னணி வங்கிகளில் கிரெடிட் கார்டு மற்றும் தனிப்பட்ட லோன்கள் பிரிவில் காலியாக உள்ள விற்பனைப் பிரிவு அதிகாரி பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெற இருக்கிறது. ஜூன் 8 முதல் ஜூன் 10 ஆம் தேதிவரையில் இதற்கான நேர்முகத்தேர்வு நடைபெற இருக்கிறது. தேர்ச்சி பெறுபவர்களுக்கு 5000 திர்ஹம்ஸ் சம்பளம், இன்செண்டிவ்ஸ் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் இதே துறையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்தவராக இருத்தல் அவசியம். திறமையான தகவல்தொடர்பு, வாடிக்கையாளர்களுடனான உறவை மேம்படுத்துவதில் சிறந்தவராக இருத்தல் வேண்டும். மேலும் தேர்ச்சி பெற்றால் உடனடியாக பணிகளில் சேரத் தயாராக இருக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4,000 – 5,000 திர்ஹம்ஸ் சம்பளம் என்றாலும் நன்கு திறமை பெற்றவர்களுக்கு கூடுதலாகவும் வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளங்கலை பட்டப்படிப்பு அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கிரெடிட் கார்டு விற்பனைப் பிரிவு அதிகாரி பணிக்கு விண்ணபிப்பவர்கள் அமீரகத்தில் 1 – 2 ஆண்டுகள் கிரெடிட் கார்டு சேல்ஸ், லோன்கள் மற்றும் இன்சுரன்ஸ் பணிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவராக இருத்தல் அவசியம். இதே பணியில் வெளிநாடுகளில் இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கும் இளங்கலைக் கல்வி அவசியம். 4,000 – 5,000 திர்ஹம்ஸ் சம்பளம் மற்றும் இன்செண்டிவ்ஸ் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 8 – 10 வரையிலான 3 நாட்களில் காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரையிலும் நேர்காணல் நடைபெற இருக்கிறது.

நேர்காணல் நடைபெறும் முகவரி

மசூத் டவர் 2 (Masaood Tower 2),

அலுவலக எண் 302-304 (Office No. 302-304), (அல் புட்டைம் டொயாட்டோ ஆட்டோ மாலுக்கு அடுத்தது)

போர்ட் சயீத் (Port Saeed),

தேரா (Deira),

துபாய்.

job
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap