UAE Tamil Web

அபுதாபி: வங்கியில் சேல்ஸ் ஆபிசர் வேலை ; அமீரகத்திற்கு வெளியே இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம் – விபரம் உள்ளே..!

job

அபுதாபியில் நாளை (ஜூன் 3) வங்கிகளில் காலியாக உள்ள சேல்ஸ் ஆபிசர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நடைபெற இருக்கிறது.

கிரெடிட் கார்டு விற்பனை மற்றும் தனிப்பட்ட லோன் பிரிவில் அனுபவம் உள்ளவர்கள் நேர்முகத்தேர்வுக்கு வரலாம். விண்ணப்பதாரர்கள் பேச்சுத்திறமை பெற்றவர்களாகவும் நேரடி மற்றும் டெலிபோன் மூலமாக விற்பனை செய்வதில் அமீரகத்தில் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.

தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஊதியம் மட்டுமல்லாது கவர்ச்சிகரமான இன்செண்டிவ்ஸ் -ம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்ச்சி பெற்றவர்கள் உடனடியாக பணியில் சேரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்விற்கு வருகையில் தங்களுடைய புதுக்கப்பட்ட CV ஐ எடுத்துச் செல்லவும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் முகவரி,

அலுவலக எண் 501 (office No. 501),

யுனைட்டட் அரப் பேங்க் கட்டிடம் (United Arab Bank Building),

கலீஃபா வீதி (Khalifa Street),

அபுதாபி (Abu Dhabi).

அமீரகத்திற்கு வெளியே இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்

மேலே குறிப்பிட்டுள்ள துறைகளில் அனுபவம் இல்லாதவர்களாக இருந்தாலும் கிரெடிட் கார்டு விற்பனை மற்றும் தனிப்பட்ட லோன் பிரிவு தொடர்பான பணிகளில் இருந்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். அமீரகத்திற்கு வெளியே இருப்பவர்களும் தங்களுடைய CV ஐ info@mandm-marketing.ae. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

job
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap