UAE Tamil Web

அமீரகத்தில் வேலைவாய்ப்பு : தங்குமிடம், போக்குவரத்து இலவசம் – முழுவிபரம் உள்ளே..!

interviewgetty

அமீரகத்தைச் சேர்ந்த உணவு நிறுவனமான யுனிகாய் ஃபூட்ஸ் (Unikai Foods) நிறுவனம் தங்களது நிறுவனத்தில் காலியாக உள்ள வேன் சேல்ஸ்மேன், பொது உதவியாளர்கள், UHT டெக்னீஷியன் மற்றும் எலெக்ட்ரிக்கல் டெக்னீஷியன் போன்ற பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

ஜூன் 6 ஆம் தேதிமுதல் 10 ஆம் தேதிவரையில் மேற்கண்ட பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிவேக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (fast-moving consumer goods – FMCG) பிரிவில் அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு கவர்ச்சிகரமான ஊதியமும் தங்குமிடம் மற்றும் போக்குவரத்து ஆகியவை இலவசமாக வழங்கப்படும் எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவ்வாரத்தில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரையில் இந்த நேர்காணல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்காணல் நடைபெறும் முகவரி

யூனிகாய் ஃபூட்ஸ் நிறுவன அலுவலகம்,

அல் கூஸ் -1 (Al Quoz-1),

அல் மெய்தான் தெரு (Al Meydan Street), துபாய் பவுலிங் மையத்திற்கு அருகே (Dubai Bowling Centre)