UAE Tamil Web

துபாயிலுள்ள இந்திய துணை தூதரகத்தில் பணிபுரிய ஆசையா? விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..!

recruite

துபாயில் உள்ள இந்திய துணை தூதரகம் அதன் பத்திரிக்கை தகவல் துறையில் உதவியாளர்கள் பிரிவில் பணிபுரிய வேலை வாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இதற்கான மாத ஊதியம் 8500 திர்ஹம்ஸிற்கும் அதிகமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு 7,200 திர்ஹம்ஸ் ஊதியத்துடன் ஊக்கத்தொகை அனைத்தும் சேர்த்து 13,680 திர்ஹம்ஸ் வரை மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர சுகாதார காப்பீடும் துணைத் தூதரகத்தால் வழங்கப்படும்.

விண்ணப்பத்திற்கான தகுதிகள்:

  • விண்ணப்பதாரர்கள் முதுகலைப் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
  • ஆங்கில மொழியில் புலமை பெற்றிருக்க வேண்டும்.
  • மீடியா கம்யூனிகேஷன் (media communication) அல்லது மீடியா ஜெர்னலிசம் (media journalism) படித்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரபிக் தெரிந்திருப்பது வரவேற்கத்தக்கது.
  • சமூக ஊடகங்கள், ஊடகத்துறை மற்றும் பத்திரிகை சார்ந்த வெளியீடுகள் போன்றவற்றை சிறந்த முறையில் கையாளும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
  • சமூக ஊடகம் (social media) அல்லது அதற்குத் தொடர்புடைய பணிகளில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 2021 மார்ச் 14 ஆகும்