UAE Tamil Web

அமீரக சுகாதாரத்துறை அல்டிமேட் – குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு!

கொரோனா பெருந்தொற்றை வெல்லும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை முடிக்கிவிட்டுள்ள நிலையில் அமீரகத்திலும் பல தரப்பட்ட திட்டங்கள் மூலம் கொரோனா தடுப்பூசி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சினோஃபார்ம் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில், அமீரகத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 – 17 வயது குழந்தைகளுக்கு 96%க்கும் அதிகமாக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பது தெரிய வந்துள்ளது. அபுதாபியில் 900 குழந்தைகளை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின் குழந்தைகளுக்குள் உருவாகியுள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் தன்மை குறித்து பரிசோதிக்கப்பட்டதில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளன.

Dubai: Children 12 and older get Pfizer COVID-19 vaccine | News-photos –  Gulf News

இதுவரை 2 தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட குழந்தைகள் யாருக்குமே கொரோனா தொற்று வந்ததில்லை என கண்டறியப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திய குழந்தைகளில் 29.7% பேருக்கு ஊசி செலுத்தப்பட்ட இடத்தில் வலி இருந்ததாகவும், 8% பேருக்கு தலைவலியும், 3.7% பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. இந்த பக்க விளைவுகள் ஒருசில நாட்களில் குணமடைந்துவிட்டதாகவும் குழந்தைகள் தெரிவித்துள்ளனர். அமீரக சுகாதாரத்துறையின் முயற்சியால் 96%க்கும் அதிகமான குழந்தைகள் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றிருப்பது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

0 Shares
Share via
Copy link