UAE Tamil Web

நேற்று அமீரகத்தில் இதையெல்லாம் கவனித்தீர்களா?

Bahrain National Day

நேற்று பஹ்ரைனின் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அமீரகத்தின் முக்கிய இடங்களில் பஹ்ரைன் கொடி விளக்குகளால் ஏற்றப்பட்டது. நிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தினர்களுக்கு மலர்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்குதல் போன்றவைகளும் நடைபெற்றன.

- Advertisment -

அதேபோல, விமான நிலையங்களில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. அமீரகம் – பஹ்ரைன் இடையிலான நெடுநாள் நட்பின் பலனாக இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அமீரகத்தின் தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் மாட்சிமை தாங்கிய பஹ்ரைன் மன்னர் ஹமாத் பின் இஸா அல் கலீஃபா ஆகியோரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றினால் இந்த இரு நாடுகளுக்கு இடையேயான பிணைப்பு மேலும் வலுப்பெறுகிறது.

உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் நேற்று பஹ்ரைனின் கொடி மின் விளக்குகளால் ஒளிர்ந்தது. “பஹ்ரைன் சுதந்திர தினத்தை முன்னிட்டு புர்ஜ் கலீஃபா ஒளிர்கிறது” என புர்ஜ் கலீஃபாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.