UAE Tamil Web

அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த உலகளாவிய முயற்சிகளை தொடங்குகிறது அமீரகம்..

ERC

பாதுகாப்பு, அமைதி, ஸ்திரத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சிகளை அமீரகம் தொடங்க உள்ளது.

- Advertisment -

அல் தஃப்ரா(Al Dhafra) பிராந்திய ஆட்சியாளரின் பிரதிநிதியும், எமிரேட்ஸ் ரெட் கிரசண்ட் (ERC) தலைவருமான ஷேக் ஹம்தான் பின் சயீத் அல் நஹ்யான் இது பற்றி கூறுகையில், “ஜனாதிபதி பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் தலைமையில், உலகெங்கிலும் உள்ள கொந்தளிப்பான பகுதிகளில் பாதுகாப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த மனிதாபிமான மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை அமீரகம் தொடங்க உள்ளது”என்று கூறியுள்ளார்.

மேலும் அமீரக துணை தலைவரும், பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஆதரவின் காரணமாக, நடப்பு ஆண்டு எமிரேட்ஸ் ரெட் கிரசெண்டின் நிகழ்வுகள் மற்றும் திட்டங்கள் நாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் நல்லதொரு முன்னேற்றம் கண்டுள்ளது. அபுதாபியின் பட்டத்து இளவரசரும், அமீரக ஆயுதப்படைகளின் துணை உச்ச தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், ERC-ன் திறன்களை மேம்படுத்துவதோடு, அதன் ஒட்டுமொத்த நோக்கத்தையும் விரிவுபடுத்துகிறார் என்றும் கூறியுள்ளார்.

ஜனவரி முதல் செப்டம்பர் வரை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ERC திட்டங்களுக்காக 766 மில்லியன் திர்ஹம்ஸ் செலவிடப்பட்டுள்ளதாக ஷேக் ஹம்தான் தெரிவித்தார். அமீரகத்தில் உள்ள சுமார் 2 மில்லியன் மக்களுக்கு 180 மில்லியன் திர்ஹம்ஸிற்கும் அதிகமான நிதி விநியோகிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ளது.ERC-ன் செயல்பாடுகள் மற்றும் மனிதாபிமான திட்டங்களை ஆதரிப்பதில் நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பதாக பாராட்டு தெரிவித்தார்.

அமீரகத்திற்கு வெளியே தொடங்கப்பட்ட திட்டங்களின் செலவு 583,751,531 திர்ஹம்ஸ் ஆகும். இதில் பல நாடுகளில் நிவாரண திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளுக்காக 87,944,163 திர்ஹம்ஸும் அடங்கும். அதே நேரத்தில் ERC-ன் சர்வதேச வளர்ச்சி திட்டங்களின் மதிப்பு 257,265,728 திர்ஹம்ஸ். வெளிநாடுகளில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு கூடுதலாக 238,541,640 திர்ஹம்ஸ் செலவிடப்பட்டுள்ளது.

இதனிடையே ERC ஆணைய கூட்டத்தில் ஜோர்டான் மற்றும் ஈராக் குர்திஸ்தானில் உள்ள அகதிகள் முகாம்களில் ஷேக் ஹம்தான் பின் சயீத் அல் நஹ்யான் தொலைநிலை கற்றல் முயற்சி, மற்றும் சூடான் மற்றும் சிரியாவில் வெள்ளம் மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு செய்ய வேண்டிய மனிதாபிமான முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.