UAE Tamil Web

குவைத் இருண்டது: குவைத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட ஷேக் நாசர் காலமானார் – அமீரக தலைவர்கள் அஞ்சலி..!

uae-leader,-saudi-arabia,-national-day,-sheikh-mohammed,-sheikh-khalifa (1)

நவீன குவைத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட ஷேக் நாசர் சபா அல் அகமது அல் ஜாபர் அல் சபா நேற்று காலமானார். இதனையடுத்து குவைத்தின் அரசரான பெருமதிப்பிற்குரிய ஷேக் நவாஃப் அல் அகமது அல் ஜாபர் அல் சபா அவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக அமீரகத்தின் தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் தெரிவித்திருக்கிறார்.

Sheikh Nasser
Image Credit: Khaleej Times

அதேபோல, அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப் படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களும் ஷேக் நாசர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.

uae-leader,-saudi-arabia,-national-day,-sheikh-mohammed,-sheikh-khalifa (1)
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap