UAE Tamil Web

கத்தார் தேசிய தினத்தை முன்னிட்டு அந்நாட்டு மன்னருக்கு வாழ்த்துத் தெரிவித்த அமீரக ஆட்சியாளர்கள்..!

uae-leader,-saudi-arabia,-national-day,-sheikh-mohammed,-sheikh-khalifa (1)

கத்தார் இன்று தனது தேசிய தினத்தைக் கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு கத்தார் நாட்டின் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தானி அவர்களுக்கு அமீரகத்தின் தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அதேபோல, அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தானி அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

uae-leader,-saudi-arabia,-national-day,-sheikh-mohammed,-sheikh-khalifa (1)
0 Shares
Share via
Copy link