UAE Tamil Web

எஸ்தோனியா சுதந்திர தினம்: வாழ்த்து தெரிவித்த அமீரக தலைவர்கள்..!

UAE Leaders

எஸ்தோனியாவின் சுதந்திர தினம் இன்று (பிப்ரவரி 24) கொண்டாடப்படுவதையொட்டி அமீரகத்தின் தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் எஸ்தோனியா நாட்டின் ஜனாதிபதியான கேர்ஸ்டி கல்ஜுலைத் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படைத் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோரும் எஸ்தோனியா ஜனாதிபதிக்கும் அந்நாட்டின் பிரதமர் கஜா கல்லாஸ் அவர்களுக்கும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கின்றனர்.

UAE Leaders
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap