35.4 C
Dubai
May 25, 2020
UAE Tamil Web

ஈத் அல் பித்ர் வாழ்த்துக்களைத் தெரிவித்த அமீரக ஆட்சியாளர்கள்!

uae,-eid-al-fitr,-dubai,-abu-dhabi,-ramadan

அமீரகத்தின் தலைவரான பெருமைமிகு ஷேக் கலிஃபா பின் சையத் அல் நஹ்யான் (Sheikh Khalifa bin Zayed Al Nahyan) அரபு மற்றும் இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்குத் தனது ஈத் அல் பித்ர் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

மேலும், ஆட்சியாளர்கள் மற்றும் பொது மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி பெருகவும், நீடித்த வளர்ச்சி அமையவும் வாழ்த்துவதாக நஹ்யான் அறிவித்திருக்கிறார்.

அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான பெருமைமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் (Sheikh Mohammed bin Rashid Al Maktoum) மற்றும் அபுதாபியின் இளவரசரும், அமீரக ஆயுதப் படையின் துணை தலைமைத் தளபதியுமான பெருமைமிகு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் (Sheikh Mohamed bin Zayed Al Nahyan) அவர்களும் அரபு மற்றும் இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்குத் தங்களது ஈத் அல் பித்ர் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.

மற்ற சில பதிவுகள்