UAE Tamil Web

91 வது சவூதி தேசிய தினத்தை முன்னிட்டு சவூதி மன்னருக்கு வாழ்த்து தெரிவித்த அமீரக ஆட்சியாளர்கள்..!

uae-leader,-saudi-arabia,-national-day,-sheikh-mohammed,-sheikh-khalifa (1)

சவூதி அரேபியாவின் 91 வது தேசிய தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமீரகத்தின் தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Khalifa bin Zayed Al Nahyan), அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் (Sheikh Mohammed bin Rashid Al Maktoum), அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Mohamed bin Zayed Al Nahyan) ஆகியோர் சவூதி மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் (Salman bin Abdulaziz Al Saud) அவர்களுக்கு தங்களுடைய வாழ்த்தைத் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும், சவூதியின் பட்டத்து இளவரசரும் துணைப் பிரதமரும் சவூதியின் பாதுகாப்புத்துறை அமைச்சருமான முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் (Mohammed bin Salman bin Abdul Aziz) அவர்களுக்கும் அமீரக ஆட்சியாளர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்திருப்பதாக Wam செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது
uae-leader,-saudi-arabia,-national-day,-sheikh-mohammed,-sheikh-khalifa (1)
0 Shares
Share via
Copy link