சவூதி அரேபியாவின் தேசிய தினம் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
துபாய் ஆட்சியாளர் வெளியிட்டுள்ள வீடியோவில்,”DIFC கேட்டில் அமீரகம் – சவூதி இடையேயான உறவுகளை வெளிப்படுத்தும் விதமாக காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், #together_forever என்ற ஹேஷ்டாக்கும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
كل عام والمملكة وقيادتها بخير وعز وأمن وأمان … اليوم الوطني السعودي في كل عام هو مناسبة عزيزة علينا جميعاً .. مناسبة نجدد فيها الأخوة .. ونرسخ فيها المحبة …وننطلق منها نحو مستقبل أفضل وأجمل لشعبين يجمعهما طموح لا يحده حدود #معاً_أبداً pic.twitter.com/oLTrZzEVJz
— HH Sheikh Mohammed (@HHShkMohd) September 21, 2021
இதுகுறித்து துபாய் ஆட்சியாளர் வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில்,” எல்லைகளற்ற இலக்கை நோக்கி சகோதரத்துவத்துடன் நாம் நடைபோடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அபுதாபி இளவரசர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,”உங்களுடைய ஒவ்வொரு வெற்றியையும் கொண்டாட நாங்கள் இருக்கிறோம். ஒளிமையமான எதிர்காலத்தை நோக்கி நடைபோடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சவூதி இளவரசர் மற்றும் சவூதி வாழ் மக்களுக்கு தேசிய தின வாழ்த்துக்களை அபுதாபி இளவரசர் தெரிவித்தார்.
Congratulations to the Custodian of the Two Holy Mosques King Salman bin Abdulaziz, my brother the Crown Prince, and the Saudi people on their 91st National Day. Our two nations stand as one and we celebrate all your achievements. We look forward to a bright future together.
— محمد بن زايد (@MohamedBinZayed) September 21, 2021
