UAE Tamil Web

ஓமானின் 50 வது தேசிய தினம் – சுல்தானுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அமீரக தலைவர்கள்…!

UAE Leaders

நாளை ஓமான் நாட்டின் 50 வது தேசிய தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி அமீரகத்தின் தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் முகமது அவர்கள் ஓமானின் சுல்தானாகிய ஹைதம் பின் தாரிக் அல் ஸைத் ( Haitham bin Tariq Al Said) அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisment -

அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் (Sheikh Mohammed bin Rashid Al Maktoum), அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Mohamed bin Zayed Al Nahyan) ஆகியோரும் அல் ஸைத் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றனர்.