UAE Tamil Web

உலகின் மிகச்சிறந்த மனிதரான நபியின் (ஸல்) பாதையில் நடப்போம் – துபாய் ஆட்சியாளர் மற்றும் அபுதாபி இளவரசர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி..!

sheikh mohammed 1

அமீரகத்தில் வருகின்ற அக்டோபர் 21 ஆம் தேதி நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனைமுன்னிட்டு துபாய் ஆட்சியாளர் மற்றும் அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஆகியோர் இஸ்லாமிய நாடுகளுக்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் வெளியிட்ட ட்வீட்டில்,” உலகின் மிகச்சிறந்த மனிதரின் பிறந்தநாளினை முன்னிட்டு அனைத்து இஸ்லாமிய நாடுகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கிறோம். எங்களுடைய அன்புக்குரிய, எங்களது தலைவரான மற்றும் எங்களது கண்களுக்கு ஆறுதலாக இருக்கும் நபியின் குடும்பத்தார் மற்றும் அவரது தோழர்களை இந்நாளில் நினைவுகூர்வோம். ஆமென்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“நம்முடைய உன்னத நபியின் பிறந்தநாளில், அமைதி அவருக்கு உண்டாக பிரார்த்திப்போம் … அவருடைய வாழ்க்கை வரலாறு, அவருடைய சிறந்த ஒழுக்கங்கள், கருணை, அன்பு மற்றும் நற்குணத்தை வலியுறுத்தும் அவரது செய்தியை நாங்கள் நினைவில் கொள்கிறோம் … உலகில் அமைதி மற்றும் பாதுகாப்பு நிலவ நாங்கள் கடவுளிடம் பிரார்த்திக்கிறோம்” என அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

sheikh mohammed 1
2 Shares
Share via
Copy link