UAE Tamil Web

பஹ்ரைன் பிரதமர் காலமானார் : அமீரக தலைவர்கள் அஞ்சலி..!

death of Bahraini Prime Minister

பஹ்ரைன் நாட்டின் பிரதமரும் பட்டத்து இளவரசருமான கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா (Khalifa bin Salman Al Khalifa) காலமானதைத் தொடர்ந்து அமீரக தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்திருக்கின்றனர்.

- Advertisment -

அமீரகத்தின் தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான், பஹ்ரைனின் மன்னரான ஹமாத் பின் இஸா அல் கலீஃபா (Hamad bin Isa Al Khalifa) விற்கு தன்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப் படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களும் பஹ்ரைன் இளவரசர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.