சவூதி இளவரசர் நஹர் பின் சவுத் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் (Nahar bin Saud bin Abdulaziz Al Saud) மரணமடைந்ததாக சவூதி அரச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து சவூதி அரேபியாவின் அரசர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் அவர்களுக்கு தன்னுடைய இரங்கலைத் தெரிவித்துள்ளார் அமீரகத்தின் தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான்.
அதேபோல, அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோரும் சவூதி அரேபியாவின் அரசர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.