UAE Tamil Web

சவூதி இளவரசி மரணம் : அமீரக தலைவர்கள் அஞ்சலி..!

uae-leader,-saudi-arabia,-national-day,-sheikh-mohammed,-sheikh-khalifa (1)

சவூதி அரேபியாவின் இளவரசியான தர்ஃபா பிண்ட் சவுத் பின் அப்துல் அஜீஸ் (Tarfa bint Saud bin Abdulaziz) காலமானதாக சவூதி அரச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது

- Advertisment -

இதனையடுத்து சவூதி அரசரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (Salman bin Abdulaziz) அவர்களுக்கு அமீரகத்தின் தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.

அமீரக தலைவர் தனது இரங்கல் செய்தியில், இறந்தவரின் ஆத்மாவை சொர்க்கத்தில் ஓய்வெடுக்கவும், அல் சவுத் குடும்பத்திற்கு ஆறுதலையும் பொறுமையையும் வழங்கவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோரும் சவூதி இளவரசி மறைவிற்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.