UAE Tamil Web

குவைத் மன்னரின் இல்லத்தில் நேர்ந்த மரணம்: அமீரக தலைவர்கள் அஞ்சலி..!

uae-leader,-saudi-arabia,-national-day,-sheikh-mohammed,-sheikh-khalifa (1)

குவைத்தின் மன்னரான ஷேக் நவாஃப் அல் அகமது அல் ஜாபர் அல் சபா அவர்களின் சகோதரி இன்று மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குவைத்தின் மன்னருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக அமீரகத்தின் தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் தெரிவித்திருக்கிறார்.

- Advertisment -

அதேபோல, அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப் படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களும் குவைத் மன்னரின் சகோதரி மறைவிற்கு இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.