UAE Tamil Web

உலக முஸ்லிம்களுக்கு அமீரக தலைவர்கள் ரமலான் வாழ்த்து

அமீரகத்தில் நேற்று மாலை பிறை பார்க்கப்பட்டதை அடுத்து  இன்று ஏப்ரல் 2 சனிக்கிழமை புனித ரமலான் மாதத்தின் முதல் நாளாக கடைபிடிக்கப்பட்டு நோன்பு நோற்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள், மற்ற அரபு நாடுகள் மற்றும் உலக நாடுகளின் முஸ்லிம் மக்கள் அனவருக்கும் அமீரக தலைவர்கள் தங்களின் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், புனித ரமலான் மாதத்தின் வருகையை முன்னிட்டு  அமீரகம் மற்றும் அனைத்து அரபு மற்றும் முஸ்லீம் நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை ட்விட்டர் தெரிவித்துள்ளார்.

அதேபோல அபுதாபியின் இளவரசரும், அமீரக ஆயுதப் படைகளின் துணைத் தளபதியுமான ஷேக் முகமது பின் ஜயீத் அல் நஹ்யானும், அமீரகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு புனித ரமலான் மாதத்தின் வருகையை முன்னிட்டு மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap