UAE Tamil Web

COP28 ஏலத்தில் உலகநாடுகளுடன் போட்டிபோடும் அமீரகம் – கிடைச்சா… செம்ம கெத்து தான்…!

THE SHEIKHS

கான்ஃபெரன்ஸ் ஆஃப் தி பார்ட்டீஸ் (COP) ன் 28 வது உச்சி மாநாடு எந்த நாட்டில் நடக்க இருக்கிறது என்பது இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிறது. இதற்கான ஏலத்தில் அமீரகம் துவக்கத்திலிருந்தே ஆர்வம் காட்டிவந்தது.

COP-னா என்ன?

உலக வெப்பமயமாதல், காலநிலை மாற்றத்தினை கட்டுப்படுத்த உலகநாடுகளின் தலைவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், காலநிலை மாற்ற நிபுணர்கள், தொழில்துறை வல்லுனர்கள், ஊடகங்கள் ஆகியோர் ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாட்டில் கலந்துகொல்வது வழக்கம்.

அதன்படி COP 26 ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரத்தில் இந்த வருடம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் 28 வது COP மாநாடு எந்த நாட்டில் நடைபெறும் என்பது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பொதுவாக, ஏலத்தின் அடிப்படையில் COP மாநாட்டை நடத்தும் நாடு தேர்ந்தெடுக்கபடுவது வழக்கம். அப்படி நடைபெற்ற ஏலத்தில் அமீரகம் கலந்துகொண்டது. மேலும், உலக நாடுகள் பலவும் இந்த ஏலத்தில் அமீரகத்திற்கு உறுதுணையாக இருப்பதாக அறிவித்துள்ளன.

இதுகுறித்துப் பேசிய அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்,” COP28 நடைபெறும் நாடு விரைவில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறது. புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் குறித்து உலகத்தரத்திலான மாநாட்டை அமீரகம் நடத்த தயாராக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடைபெற இருக்கும் அம்மாட்டிற்கு உகந்ததாக பல்வேறு வகையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு உலகளவில் ஏற்படுத்தப்பட்டுவரும் நிலையில் இம்மாநாடு அமீரகத்தில் நடைபெறும் பட்சத்தில் உலகளவில் அமீரகம் கவனம் பெறும் என்பதால் அமீரக அரசு இந்த ஏலத்தில் வெற்றிபெற ஆர்வம் காட்டியது குறிப்பிடத்தக்கது.

THE SHEIKHS
2 Shares
Share via
Copy link