UAE Tamil Web

நேருக்குநேர் மோதிய ரயில்கள்; 32 பேர் உயிரிழப்பு – அமீரக தலைவர்கள் அஞ்சலி..!

Train Accident

எகிப்தின் தஹ்டா மாவட்டத்தில் சஹோக் ஆளுமைப் பகுதியில் நேற்று மோசமான ரயில் விபத்து நிகழ்ந்திருக்கிறது. இரு பயணிகள் ரயில்கள் நேருக்குநேர் மோதியதால் நேர்ந்த இந்த கோர விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 165 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நிலைமையை சீராக்க 72 ஆம்புலன்ஸ் களத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து எகிப்தின் பிரதமரான அப்தெல்-ஃபட்டா எல் சிசி அவர்களுக்கு அமீரகத்தின் தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.

அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோரும் இந்த கோர விபத்து குறித்து எகிப்து பிரதமரிடம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Train Accident
0 Shares
Share via
Copy link