UAE Tamil Web

சவூதி இளவரசி மறைவு : அமீரக தலைவர்கள் அஞ்சலி..!

UAE Leaders

நேற்று, சவூதி அரேபியாவின் இளவரசியான ஹிஸ்ஸா பிண்ட் ஃபைசல் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் (Hessah bint Faisal bin Abdulaziz Al Saud) காலமானதாக சவூதி அரச நீதிமன்றம் அறிவித்தது.

- Advertisment -

இதனையடுத்து சவூதி அரசரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (Salman bin Abdulaziz) அவர்களுக்கு அமீரகத்தின் தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.

அமீரக தலைவர் தனது இரங்கல் செய்தியில், இறந்தவரின் ஆத்மாவை சொர்க்கத்தில் ஓய்வெடுக்கவும், அல் சவுத் குடும்பத்திற்கு ஆறுதலையும் பொறுமையையும் வழங்கவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோரும் சவூதி இளவரசி மறைவிற்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி மறைவு

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதியான வலேரி கிஸ்கார்ட் டி எஸ்டைங் (Valery Giscard d’Estaing) கொரோனா காரணமாக கடந்த புதன்கிழமை மரணமடைந்தார்.

இதனையடுத்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் அவர்களுக்கு தனது இரங்கலை அமீரகத் தலைவர் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, துபாய் ஆட்சியாளர் மற்றும் அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஆகியோரும் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி மறைவிற்கு தங்களது இரங்கல் செய்தியினை வெளியிட்டுள்ளனர்.