கொரோனா தடுப்பூசியை கையாள்வதில் உலகளவில் இரண்டாவது நாடாக அமீரகம் இருப்பதைக் குறித்து அமீரக தலைவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிகுரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,” கொரோனாவைக் கட்டுப்படுத்த அமீரகம் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. பொதுமக்களுக்கு நான் விடுக்கும் செய்தி ஒன்றுதான். அனைவரும் உடனடியாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். ஏனென்றால் அதுமட்டுமே நமது ஆரோக்கியம், பொருளாதாரம் மற்றும் சாதனைகளை பாதுகாக்கும். மேலும் கொரோனாவிலிருந்து அமீரகம் விரைவாக மீண்டுவர உதவும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
قطعت الامارات شوطاً مهماً في السيطرة على الوباء الذي تسبب به فيروس كورونا. واليوم نحن الثاني عالميا في سباق التطعيم. جهود مقدرة ومشكورة لجميع فرق العمل. ورسالتي للجميع أن يسارع للتطعيم لأنه حماية للصحة..وحماية للاقتصاد..وحماية لمكتسباتنا ..وتسريع لتعافي بلادنا الكامل باذن الله
— HH Sheikh Mohammed (@HHShkMohd) January 12, 2021
அதேபோல, அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணை தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நாட்டின் இந்த வெற்றியை பெருமையோடு சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர்,” முன்களப் பணியாளர்களின் அயராத முயற்சிகளுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 1,275,000 அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசித் திட்டம் இன்னும் வேகமெடுக்கும் என நம்புகிறோம். குறுகிய காலத்தில் நாம் கொரோனா அச்சுறுத்தலில் இருந்து வெளியேற இந்தத் திட்டம் உதவும்” என தனது ட்விட்டர் பக்கத்தில் இளவரசர் குறிப்பிட்டுள்ளார்.
Thanks to the tremendous efforts of our frontline heroes, 1,275,000 vaccinations have already been provided to UAE citizens and residents. We hope that with vaccinations picking up pace we will reach the point of full recovery in the shortest possible time.
— محمد بن زايد (@MohamedBinZayed) January 12, 2021
அமீரகத்தில் உள்ள 7 எமிரேட்களில் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கும் சுகாதார மையங்களின் முழு பட்டியலையும் காண இங்கே கிளிக் செய்யவும்.