UAE Tamil Web

7000 திர்ஹம்ஸ் சம்பளம்; வங்கிப் பணி; 1 வாரம் நடைபெறும் நேர்முகத்தேர்வு – விபரங்கள் உள்ளே..!

job 2

அமீரகத்தைச் சேர்ந்த உள்ளூர் வங்கி ஒன்று தங்களது வங்கியின் கிரெடிட்கார்டு மற்றும் பெர்சனல் லோன் அதிகாரிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் அதற்கு ஒருவாரம் நேர்முகத்தேர்வு நடைபெறும் எனத் தெரிவித்திருக்கிறது. தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு மாதம் 5000 – 7000 திர்ஹம்ஸ் வரையில் ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நேர்காணலில் கிரெடிட்கார்டு, லோன் மற்றும் காப்பீடு ஆகியவற்றில் குறைந்தபட்சம் இரண்டு வருட அனுபவமுள்ள ஆண் / பெண் என இருபாலரும் பங்கேற்கலாம். விண்ணப்பதாரர்கள் பேச்சுத் திறமை மற்றும் தனிப்பட்ட ஆளுமைத்திறனில் சிறந்து விளங்குபவராக இருத்தல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் தங்களது CV யுடன் நேரில் வரலாம். ஒருவேளை தேர்வானால் உடனடியாக பணியில் இணைய சம்மதம் அளிக்கவேண்டும் என விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விண்ணப்பதாரர் கண்டிப்பாக விசிட் விசா அல்லது மாற்றிக்கொள்ளத் தக்க வகையிலான விசாவை வைத்திருத்தல் வேண்டும்.

ஏப்ரல் 28 முதல் மே 5 ஆம் தேதிவரையில் (வெள்ளிக்கிழமை கிடையாது) நேர்காணலானது நடைபெற இருக்கிறது.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி

அல் மசாவூத் டவர் 2 (Al Masaood Tower 2),

அலுவலக எண் 302 (office No. 302),

போர்ட் சயீத் (Port Saeed),

தேரா (Deira),

துபாய் (Dubai).

job 2
0 Shares
Share via
Copy link