UAE Tamil Web

அமீரகம்: LULU நிறுவனத்தின் ரமலான் மாதத்திற்கான சிறப்பு தள்ளுபடிகள் அறிவிப்பு.. விபரம் உள்ளே..!

அமீரகத்ததில் ஏப்ரல் 2 அல்லது 3 அன்று ரமலான் மாதமாக இருக்கும் என்பதால் விற்பனையாளர்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு அதிகளவில் தள்ளுபடியை அறிவித்து வருகின்றனர்.

அதன்படி, அமீரகத்தின் பிரபலமான நிறுவனமான லுலு, 15,000-க்கும் அதிகமான பொருட்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது.

இது குறித்து லுலுவின் நிர்வாக இயக்குனர் அஷ்ரப் அலி கூறுகையில், இந்த சிறப்பு சலுகையில் 15,000-க்கும் அதிகமான தயாரிப்புகள் விற்பனைக்கு உள்ளது, இந்த பொருட்களுக்கு அமீரகம் முழுவதும் 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் ரமலான் மாதம் இறுதிவரை தள்ளுபடி விற்பனையில் இருக்கும். புனித மாதத்தை சிறந்த முறையில் கொண்டாட தள்ளுபடிகள் அமீரக மக்களுக்கு உதவும் என்றும் அவர் கூறினார்.

இந்த தள்ளுபடி விற்பனை சலுகையை லுலு ஹைப்பர் மார்க்கெட், சூப்பர் மார்கெட் போன்ற விற்பனை நிலையங்களில் நேரடியாகவும் மற்றும் ஆன்லைனிலும் வாங்கிக் கொள்ளலாம் என்று லுலு குழுமம் அறிவித்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap