UAE Tamil Web

துபாய் விமான நிலையத்தில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பிடிபட்ட திருட்டு பணிப்பெண்கள்..!

maid

5 ஆண்டுகளுக்கு முன்பு தனது உரிமையாளரிடமிருந்து 30,000 திர்ஹம்ஸை திருடிவிட்டு அமீரகத்திலிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படும் இரண்டு பணிப்பெண்கள் துபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.

- Advertisment -

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 2016ஆம் ஆண்டு இந்த இரண்டு பணிப்பெண்களும் தங்களது உரிமையாளர் ஊரில் இல்லாத சமயம் பார்த்து உரிமையாளரிடம் வேலை செய்யும் டிரைவர் ஒருவரின் பாதுகாப்பில் இருந்த இவர்களது பாஸ்போர்ட்டை திருடிக் கொண்டு, உரிமையாளர் வீட்டில் குழந்தைகளின் அலமாரியிலிருந்த 30,000 திர்ஹம்ஸ் பணத்தையும் எடுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

இதையடுத்து உரிமையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட டிரைவர், பணிப்பெண்களின் பாஸ்போர்ட் திருடப்பட்டிருப்பதையும், அவர்களையும் காணவில்லை என்றும் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கூறியுள்ளார்.

விடுமுறைக்கு சென்ற உரிமையாளர் திரும்ப வந்த உடன் காவல் நிலையம் சென்று 30,000 திர்ஹம்ஸ் பணத்துடன் தப்பிச்சென்ற பணிப்பெண்கள் மீது புகார் அளித்துள்ளார்.

காவல்துறையின் தீவிர விசாரணையில் நண்பர் ஒருவர் உதவியுடன் பணிப்பெண்கள் அமீரகத்தை விட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து குற்றவாளிகளின் தகவல்கள் அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டு பிளாக் லிஸ்ட் (Black list) செய்யப்பட்டது.

இதனிடையே கடந்த 5 வருடங்களாக சிக்காத இந்த பணிப்பெண்கள் துபாய் விமான நிலையத்தில் பிடிபட்டனர். விசாரணையின்போது பணத்தை திருடியதையும், டிரைவரின் காரிலிருந்து பாஸ்போர்டை எடுத்து சென்றதையும், நண்பர் ஒருவரின் உதவியுடன் டிக்கெட்டை முன்பதிவு செய்து அமீரகத்தை விட்டு தப்பிச்சென்றதையும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து மேல்கட்ட விசாரணைக்காக காவல்துறையினர் இந்த வழக்கை பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பி வைத்தனர்.