UAE Tamil Web

அமீரகத்தில் நான்கு உயிர்களை மீட்ட உடல் உறுப்பு தானம்..!

organ

அல் அய்ன் பகுதியை சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் தனது மரணத்திற்குப் பிறகும் அனைவருக்கும் மிகப் பெரிய முன்னுதாரணமாக மாறியிருக்கிறார்.

இவர் கடந்த மாதம் தவ்வம்(Tawam) மருத்துவமனையில் கடுமையான பக்கவாதம் காரணமாக அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவருக்கு மூளையில் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக மூளை சாவு ஏற்பட்டது என்று புதன்கிழமை (நேற்று) மருத்துவமனை தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இறந்த நபரின் உறவினர்களின் ஒப்புதலைப் பெற்றபின் உடல் உறுப்பு தானத்திற்கான அறுவை சிகிச்சை சுமார் நான்கு மணி நேரம் மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சை செய்து பிரித்தெடுக்கப்பட்ட உடலுறுப்புகளில் இதயம் சவுதி அரேபியாவிலுள்ள ஒருவருக்கும்,  பிற உடல் உறுப்புகள் துபாய் மற்றும் அபுதாபியில் உள்ள வெவ்வேறு நோயாளிகளுக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையானது செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சவுதி ஆலோசகர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த இரண்டு வல்லுநர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

இது போன்ற அறுவை சிகிச்சை அல் அய்னில் இரண்டாவது முறையாக நடைபெறுகிறது. இச்சிகிச்சையானது குணப்படுத்தவே முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகளின் உயிர்களை காப்பாற்ற உதவிகரமாக அமைந்துள்ளது.

தவ்வம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவின் தலைவரும், உடலுறுப்பு தான பிரிவு தலைவருமான ‘ஹலா அபி சைத்’ கூறும் போது, அபுதாபியில் உள்ள இரண்டு நோயாளிகளில் ஒருவருக்கு கல்லீரல் பொருத்தப்பட்டுள்ளது, மற்றொருவருக்கு சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது. துபாயை சேர்ந்த ஒருவருக்கு சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் சவுதி அரேபியாவில் உள்ள ஒருவருக்கு இதயம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையானது மிகவும் திறமையான மருத்துவ மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியினால் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது என்று கூறினார்.

organ
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap