UAE Tamil Web

முக்கியச் செய்தி: ஈத் தொழுகை இடத்தில் இறந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு – அமீரக காவல்துறை தீவிர விசாரணை..!

police

புஜைராவில் உள்ள ஈத் தொழுகை ஹாலின் பின்புறத்தில் 39 வயது ஏமிராட்டி ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்ததாக புஜைரா காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 8 மணிக்கு புஜைரா காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக புஜைரா காவல்துறை, தேசிய ஆம்புலன்ஸ் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இறப்பிற்கான காரணம் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் இறந்தவரின் உடல் தடயவியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொழுகை மையத்தில் ஆண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது அருகில் இருப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

police
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap